Sunday 10 April 2016

வாட்ஸ்அப்-ல் நற்றிணை ஒலிச்செய்தி.

🌺வாட்ஸ்அப்-ல் 
நற்றிணை ஒலிச்செய்தி.🌺

🔺தமிழகம்
🔺இந்தியா
🔺அயல்நாடு
🔺வணிகம்
🔺விளையாட்டு
🔺திரை உலகச் செய்திகள்

🚩பொது அறிவு
🚩தினம் ஒரு துளி
🚩ஒரு நிமிட  யோசனை
🚩கிரிக்கெட்
🚩நித்தம் ஒரு முத்து
🚩நேயர்குரல்கள்
🚩வாரம் ஒரு வசந்தம்
🚩அறிவுப் பெட்டகம்
🚩கதை சொல்லும் நீதி
🚩வாரம் ஒரு பாடல்
🚩சிந்தனைச் சிறகு

-அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது.
.
நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க..,

1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN உங்கள்  பெயர்  மற்றும்  ஊர்

2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  உங்கள்  பெயர்  மற்றும்  ஊர்

 -டைப் செய்து 9787734166-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள்.

பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும்.

தினமும் செவிமடுங்கள்.

🌺நற்றிணை ஒலிச்செய்தி🌺

👍நன்றி👍

🙏வணக்கம்🙏

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday 4 August 2015

புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய
மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!
அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல்
வழக்கில் சிறை சென்ற பிறகு நானும்
குழந்தைகளும்
வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின்
பின்னால் உள்ள கற்பாறை மண்டிய
நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம்
அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச்
செல்லலாம் என்று எண்ணுகிறேன்..
ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான்
தெரியவில்லை.
கைதி பதில் எழுதினான். அன்பே..
குடும்பச் செலவுக்காக
வேறு ஏதாவது வழி செய்து கொள்.
பின்னாலிருக்கும் நிலத்தில்
கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய
தங்கக் கட்டிகளைப்
புதைத்து வைத்துள்ளேன்.. நீ
ஏதாவது செய்யப் போக,
பிறகு எனக்கு வைத்த இடம்
மறந்து விடும்..
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்த
ு கடிதம். அன்புள்ள கணவருக்கு..
யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன்
இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப்
புறத்தைத்
தோண்டி பாறைகளையெல்லாம்
அகற்றினர்.. இப்போது நிலம்
சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள்
எதுவும் இல்லையே..? கைதி திரும்பவும்
மனைவிக்கு எழுதினான். அன்பே..
அவர்கள் காவல் துறையினர்.. நான்
உனக்கு எழுதிய கடிதத்தைப்
படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில்
தோண்டியிருப்பார்கள்.. ஆனால்
உண்மையில் தங்கம் எதுவும் நான்
புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ
காய்கறித் தோட்டம் பயிரிடு..!!
Moral ;புத்திசாலி எங்கிருந்தாலும் தன்
காரியத்தை சாதிப்பான்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



நேர்மை ஒரு போதும் வீண்போகாது | நேர்மையை விதையுங்கள் | பதவியும் புகழும் தேடிவரும்

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.
உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.
என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.
ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.
ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.
ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.
ராமு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.
முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.
சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
நாம் சொல்லும் சொல் | நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...!
வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது | நேர்மையை விதையுங்கள் | பதவியும் புகழும் தேடிவரும்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர்.
நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,
அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,
பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.
சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.
சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,
நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.
அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.
சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது..
.”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,
உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,
உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,
நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற 
முடியும்.
”The world is like a mirror”,
it gives back to anyone the reflection of the thoughts in 
which one has strongly believed.
ஒவ்வொருவர் முன்னேற்றத்துக்கும் அவர்கள் தன்னம்பிக்கையே காரணம்...
உன்னை தவிர உன் முன்னேற்றத்தை தடுக்க
யாராலும் முடியாது...

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday 4 August 2013

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!

உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்க போகிறோம்.

* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.

* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.

* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!

படியுங்கள் படித்தபின் ஷேர் செய்யுங்கள்....யாராவது ஒரு மாணவரோ / மாணவியரோ இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உண்டு !

கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார்.

ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். அவர்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறார்கள்.(www.eltf.in )

இந்த அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். அவர்களே தேடிவந்து உதவிகள் செய்து தருகிறார்கள்.


கல்வி கற்க இனி என்ன கவலை !

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday 25 June 2013

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்

ஒரு பயனுள்ள செய்தி உங்களுக்கு:

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்:

தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.

இனிமேல் நீங்கள் V.A.O, R.I, TAHSILDAR இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச் சான்றிதல், No Graduate போன்றச் சான்றிதல்களை பெற முடியும்.

இது ஒரு கம்யூட்டரைசடு சர்டிபிகட், இதில் அரசாங்க முத்திரை இருக்காது ஆனால் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். இவ்வகையான சான்றிதல்கள் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்களிலும் ஏற்று கொள்ளப்படும்.

இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது கீழ் கண்ட இணையமுகவரிக்குச் சென்று "Register Citizen" என்பதை கிளிக் செய்து உங்களுடைய பெயர், முகவரி மற்றும் குடும்ப அட்டை எண் (அ) பாஸ்போர்ட் எண் (அ) வாகன ஓட்டுனர் லைசென்ஸ் எண் கொடுத்தால் உங்களுடைய முழு விபரமும் ரிஜிஸ்டர் ஆகி விடும். பின்னர் உங்களுக்கு தேவையான சான்றிதல்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும் மேலும் பிற்படுத்தப்பட்டோர்க்கான கல்வி உதவித்தொகை கிடைக்க வழி செய்யப்படும்.
பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் வழி வகை உண்டு.

இணைய முகவரி http://edistrict.tn.gov.in/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்